சென்னை: கடலில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் மாயம்

சென்னை: கடலில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் மாயம்
சென்னை: கடலில் குளிக்கச்சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் மாயம்

திருவொற்றியூரில் கடலில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உட்பட 4 பேர் மாயமான நிலையில், அவர்களை தேடும் பணிகள் நடந்து வருகின்றன.

சென்னை திருவொற்றியூர் பலகை தொட்டி குப்பம் அருகே கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் பகுதியைச் சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சார்ந்த 8 பேர் விடுமுறை தினம் என்பதால் கடலில் குளிப்பதற்காக சென்றுள்ளனர். கடலில் குளித்துக் கொண்டிருந்தபோது கபீர் என்பவர் கடல் அலையில் சிக்கி உள்ளே இழுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த அவரது உறவினர்கள் கபீரை காப்பாற்றுவதற்ற சென்றபோது கபீரின் சகோதரி அம்ரின் மற்றும் சகோதரன் அஃபான் மற்றும் அவர்களது நண்பர் சபரிஷ் ஆகிய 4 பேரையும் கடல் அலை உள்ளே இழுத்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து திருவொற்றியூர் தீயணைப்புத் துறை வீரர்கள், பேரிடர் மீட்பு குழுவினர் மற்றும் மீனவர்கள் ஆகியோர் 3 படகுகளில் சென்று காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும் சம்பவம் தொடர்பாக திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தீயணைப்பு வீரர்கள் மற்றும் 4 மீனவர்கள் காணாமல் போனவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com