Published : 13,Aug 2022 05:41 PM

மனைவிக்கு பாலியல் தொல்லை - வேடிக்கை பார்த்த போலீசாருக்கு ’கனத்த நன்றி’ கூறி நகர்ந்த நபர்

Woman-sexually-harassed-by-a-gang-at-Rasipuram

ராசிபுரம் அருகே தியேட்டரில் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கும்பலை தட்டிக்கேட்ட கணவர் மீது கும்பல் தாக்கும் காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது

தமிழக முழுவதும் கார்த்தி நடிப்பில் வெளியான விருமன் திரைப்படமானது நேற்று திரையரங்குகளில் வெளியானது. இந்த நிலையில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த வெண்ணந்தூர் பகுதியில் உள்ள தனியார் திரையரங்கில் விருமன் திரைப்படமானது நான்கு காட்சிகளாக ஒளிபரப்பப்பட்டு வருகிறது.

இதில் நேற்று இரவு காட்சியில் தம்பதியினர் ஒருவர் திரைப்படம் பார்க்கச் சென்றுள்ளனர். அப்போது அருகில் இருந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் பெண்ணிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளனர். இதனை தனது கணவரிடம் கூறவே கணவர், இளைஞர்கள் இடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றவே ஐந்து பேர் கொண்ட போதை கும்பல் கணவரை கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

image

இந்த வீடியோவானது சமூக வலைதளங்களில் தற்போது வேகமாக பரவி வருகிறது. மேலும் திரையரங்குக்கு வந்த காவல்துறையினரும் அந்த நபரை, கண்மூடித்தனமாக தாக்கும் கும்பலிடம் இருந்து அவரை மீட்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்நிலையில் மர்ம கும்பலிடமிருந்து தனது கணவரை மீட்க நீண்ட நேரமாக போராடி உள்ளார் அந்த பெண்.

இளைஞர்கள் அப்பெண்ணைத் தாக்கவே அப்பகுதியிலேயே பெண் மயக்கம் அடைந்துள்ளார். பின்னர் அவரை தனது தோளின் மீது தூக்கிக்கொண்டு அங்கே நின்றிருந்த காவல்துறையிடம் நன்றி எனடக கூறிவிட்டு அரசு மருத்துவமனைக்கு கணவர் கொண்டு சென்றது பெரும் வேதனை அளிக்கும் காட்சியாக அளித்துள்ளது. இந்த வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்