Published : 13,Aug 2022 03:47 PM

21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் நல்லடக்கம்

Army-soldier-Lakshmanan-body-buried-with-honor-of-21-gun-salute

வீர மரணம் அடைந்த ராணுவ வீரர் லட்சுமணனின் உடல் அவரது சொந்த ஊரான டி.புதுப்பட்டியில் 21 குண்டுகள் முழங்க ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.

ஜம்மு & காஷ்மீரில் தீவிரவாதிகளுக்கும் இந்திய ராணுவத்தினருக்கும் இடையே நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் இந்திய வீரர்கள் மூவர் மரணமடைந்தனர். அதில் மதுரையைச் சேர்ந்த லட்மணனும் ஒருவர். இன்று அவருடைய உடல் அவரது சொந்த ஊரான மதுரை டி.புதுப்பட்டியில் ஊர்வலமாக எடுத்துவரப்பட்டது. அதில் ஏராளமான பொதுமக்களும் அரசியல் தலைவர்களும் உறவினர்களும் கலந்துகொண்டனர்.

image 

அமைச்சர்கள் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் நேரில் சென்று ராணுவ வீரர் லட்சுமணன் உடலுக்கு மரியாதை செலுத்தினர். மேலும் ஓபிஎஸ், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோரும் உடலுக்கு மரியாதை செலுத்தினர்.

image

அதன்பிறகு ராணுவ மரியாதையுடன் 21 குண்டுகள் முழங்க ராணுவ வீரர் லட்சுமணன் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. லட்சுமணனுக்கு கிரிக்கெட் விளையாட்டில் ஆர்வம் அதிகம் என்பதால் சிறுவயதில் விளையாடிய கிரிக்கெட் மட்டையை வைத்து அஞ்சலி செலுத்தியதுடன் அவருடைய கிரிக்கெட் மட்டையும் உடலுடன் வைத்து புதைக்கப்பட்டது. பின்னர் அவரது உடலில் போர்த்தப்பட்டிருந்த தேசியக் கொடி லட்சுமணனின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்