Published : 13,Aug 2022 10:58 AM

கணவனை சந்தோஷப்படுத்த வேலைக்கு பெண்ணை நியமித்த மனைவி.. ஏன் எதற்காக? விநோத காரணம்!

thai-wife-hires-mistress-to-make-her-husband-happy

கணவனை சந்தோஷமாக வைத்துக் கொள்வதற்காக நல்ல படித்த அழகான பெண்ணை மனைவியே சம்பளத்துக்கு நியமித்திருக்கும் நிகழ்வு தாய்லாந்து நாட்டில் நடந்திருக்கிறது.

பாங்காக்கை சேர்ந்த 44 வயதான பத்தீம சம்னன் என்ற பெண், தன்னுடைய கணவருடன் சேர்ந்து உறங்குவது முடியாமல் போனது அவரை மிகவும் மோசமான மனைவியாக கருத செய்திருக்கிறதாம்.

இது தொடர்பாக வீடியோ வெளியிட்டு பேசியுள்ள பத்தீம சம்னன், “என் கணவரை கவனித்துக் கொள்வதற்காக நான் மூன்று பெண்களை வேலைக்கு அமர்த்த விரும்புகிறேன். இதற்கான சம்பளமாக மாதம் 33,800 ரூபாய் கொடுக்கப்படும். தங்குவதற்கு இடம், சாப்பாடும் கொடுக்கப்படும்.

image

நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் ஒன்றுதான். வேலைக்கு எடுக்கப்படும் மூவரில் இருவர் என்னுடைய அலுவலக வேலைக்கு ஒத்துழைக்க வேண்டும். ஒருவர் என்னுடைய கணவர் மற்றும் குழந்தையை கவனித்துக்கொள்ள வேண்டும். இதனால் உங்களுக்கும் எனக்கும் எந்த சண்டையும் வராது என்பதை உறுதியளிக்கிறேன்.

என் கணவர் மிகவும் கடுமையாக ஒற்றையாளாக உழைக்கிறார். அவரை சந்தோஷமாக வைத்திருக்க விரும்புகிறேன். இந்த வேலைக்கு ஒத்துவரவேண்டும் என்றால் நன்கு அழகாகவும், தொடர்புக்கொள்ளக் கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.

என் கணவருக்கு நல்ல ஒத்துழைப்பை தர வேண்டும். அவரை சந்தோஷமாக வைத்திருந்து அவருக்கு பக்கத் துணையாக இருக்க வேண்டும். வேடிக்கை குணம் கொண்டவராகவும், நல்ல ஆளுமையாக இருகக் வேண்டும். அந்த பெண்ணுக்கு குழந்தை இருக்கக் கூடாது. ஏனெனில் வேலைக்கு வரும் பெண்ணுக்கு குழந்தை இருந்தால் எங்களுக்கு அசவுகரியமாக இருக்கும்.

இதை ஏன் செய்கிறேன் என்றால், நெடு நாட்களாக மன அழுத்தத்தோடு போராடி வருகிறேன். என்னால் என் கணவரை பார்த்துக்கொள்ள முடியவில்லை. இதனால் நான் ஒரு நல்ல மனைவியாக இருக்கவில்லை என்று தோன்றுகிறது.” எனக் கூறியுள்ளார்.

மனைவி பத்தீம சம்னனின் வீடியோ விளம்பரத்தை அறிந்த கணவர் பட்டகோர்ன், ஆச்சர்யத்தில் ஆழ்ந்திருக்கிறார். ஆனால் மனைவியின் முடிவை எதிர்க்காமல் அவர் கட்டுப்பட்டிருக்கிறார்.

"என்னைக் கவனித்துக் கொள்ள யாரையாவது கண்டுபிடிக்க வேண்டும் என்று என் மனைவி என்னிடம் கூறினார். அப்படி தேர்ந்தெடுக்கப்படும் பெண்கள் எங்கள் குடும்பத்தில் ஒருவராகவே மதிக்கப்படுவார், எங்கள் வேலையிலும் அப்படித்தான் கவனிக்கப்படுவார்கள்.

image

எனக்கென எந்த கவனிப்பும் வேண்டாம். நான் எதிர்ப்பார்க்கவும் இல்லை. ஆனால் என் மனைவி விருப்பப்படுகிறார் என்பதால் அதை நிராகரிக்கவும் இல்லை.” எனக் கூறியுள்ளார்.

இந்த நிலையில், சம்னனும் அவரது கணவர் பட்டகோர்னும் அவர்களுக்கான பணிப்பெண்ணை வரவேற்றிருக்கிறார்கள். 33 வயதான அந்த பெண் பட்டகோர்னின் பணிப்பெண்ணாக நியமிக்கப்பட்டிருக்கிறார் என டெய்லி ஸ்டார் செய்தி தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண் சம்னனின் நெருங்கிய தோழி எனவும் கூறப்பட்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்