Published : 11,Aug 2022 10:18 AM
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்கள் கைது -திருமாவளவன் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்களை சிறப்பு புலனாய்வு துறையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.
சென்னை அசோக் நகரில் செய்தியாளர்களை சந்தித்த விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன், ரஜினிகாந்தை கருவியாக வைத்து பாரதிய ஜனதா கட்சி தமிழ்நாட்டில் காலூன்ற நினைப்பதாக விமர்சித்துள்ளார். மேலும் ஆளுநர் மாளிகை ஆர்.எஸ்.எஸ். மையமாக செயல்படுகிறது என்றும் திருமாவளவன் கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி கலவரத்திற்கு தொடர்பில்லாதவர்களை சிறப்பு புலனாய்வுக் துறையினர் தொடர்ந்து கைது செய்து வருவதாக திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். இதனிடையே கள்ளக்குறிச்சி கலவரத்தில் மேற்கொள்ளப்படும் பாரபட்ச நடவடிக்கையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் சார்பில் போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க: கள்ளக்குறிச்சி கலவரம்: 64 பேருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது நீதிமன்றம்! மற்றவர்கள் நிலை?