Published : 09,Aug 2022 02:31 PM
அதிமுகவின் முதல் எம்.பி கே. மாயத்தேவர் காலமானார்

அதிமுகவின் முதல் எம்.பியான மாயத்தேவர் உடல்நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 88.
எம்ஜிஆர் கட்சியை தொடங்கியபோது திண்டுக்கல் தொகுதியில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்டு வென்றவர். அதிமுகவின் முதல் எம்.பியான இவர் உடல் நலக்குறைவால் சின்னாளப்பட்டியில் காலமானார்.
அதிமுக கட்சி தொடங்கிய காலகட்டத்தில் எம்.ஜி.ஆர் உட்பட தொண்டர்கள் மீது 307 செக்ஷனில் ஜாமீனில் வரமுடியாத வழக்கு போடப்பட்டிருந்தது. அந்த சமயத்தில் இளம் வழக்கறிஞரான மாயத்தேவர் நீதிபதியுடன் நேருக்கு நேர் சண்டையிட்டு வாதாடி விடுதலை பெற்றிருக்கிறார். இதன்மூலம் எம்.ஜி.ஆருடன் நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு கட்சியில் சேர்ந்து அதிமுகவின் முதல் எம்.பியாகவும் பதவி வகித்துள்ள மாயத்தேவர் இன்று காலமானார்.
யார் இந்த மாயத்தேவர்?
இதனை வாசிக்க: எம்.ஜி.ஆரும் மாயத்தேவரும்...