Published : 09,Aug 2022 08:08 AM
காஞ்சிபுரம்: அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்கள்

அரசுப் பேருந்தில் ஆபத்தான முறையில் பயணம் செய்யும் பள்ளி மாணவர்களின் வீடியோ காட்சி சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து தாம்பரம் நோக்கிச் செல்லும் தடம் எண் 583 பேருந்தில், ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் பள்ளி மாணவர்கள் சிலர் பேருந்தில் தொங்கிய படியும், வேகமாக செல்லும் பேருந்து வெளியே கால்களை நீட்டி நெடுஞ்சாலையில் காலை தேய்த்தவாறும் பொதுமக்களையும் வாகன ஓட்டிகளையும் அச்சுறுத்தும் வகையில் ஆபத்தான முறையில் பயணம் செய்தனர்.
இதனை ஸ்ரீபெரும்புதூர் கச்சிப்படு அருகே செல்லும்போது வாகன ஓட்டிகள் சிலர் தங்களது செல்போனில் வீடியோ எடுத்துள்ளனர். இதைக்கண்ட மாணவர்கள் பேருந்தின் உள்ளே சென்றுள்ளனர். இந்த காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது
மாணவர்களின் ஆபத்தான பயணம் விபரீதத்தில் முடிவதை அறியாமல் தொடர்ந்து இதுபோன்று பயணம் மேற்கொள்வது ஆபத்தாக முடிவதோடு பொது மக்களுக்கும் அச்சுறுத்தலாக அமைகிறது.