Published : 09,Aug 2022 07:21 AM

”உண்மையில் காதலில் விழுவதென்றால் இதுதானா?” -நெட்டிசன்களை சிரிப்பலையில் சிக்க வைத்த வீடியோ!

embarrassing-happened-while-a-girl-meeting-her-boyfriend-at-the-airport

விமான நிலையங்கள் எப்போதுமே அன்பின் புகலிடமாகவே இருக்கும். ஏனெனில் உற்றார் உறவினர்களை விட்டு படிப்புக்காகவும், வேலைக்காகவும் வெளி நாட்டுக்கு செல்பவர்களை பிரிந்து எப்படி இருக்க முடியும் என்ற கேள்வி, ஏக்கம், பரிதவிப்பு என எல்லா உணர்வுகளும் கட்டி அணைப்பதிலும், அழுகையிலுமே வெளிப்படுத்தப்படும்.

அப்படியான நெகிழ்ச்சியான நிகழ்வுகள் பலவும் சமூக வலைதளங்களில் பகிர்வதன் மூலம் காணக்கிடைக்கின்றன. காதலை தெரிவிப்பதும், காதலர்களை விட்டு பிரிவதும், இன்னும் சில விமான நிலையங்களிலேயே திருமண நிச்சயம் செய்தல் போன்ற பல சம்பவங்கள் விமான நிலையங்களில் அரங்கேறும்.

image

அதில் சில வீடியோக்கள் நகைப்புக்குரியதாகவும் இருக்கும். அந்த வகையிலான வீடியோதான் தற்போது ட்விட்டர் தளத்தில் வைரலாகி வருகிறது. கிட்டத்தட்ட 10 லட்சத்திற்கும் மேலானவர்களால் பார்க்கப்பட்டிருக்கும் அந்த வீடியோ வெறும் 12 நொடிகளே கொண்டிருக்கிறது.

அந்த வீடியோவின் கமெண்ட்ஸ் செக்‌ஷனில் பலரும் இதனை 10 முறைக்கு மேல் பார்த்துவிட்டேன் என்னால் சிரிப்பை அடக்கவே முடியவில்லை எனக் குறிப்பிட்டிருக்கிறார்கள். அப்படி என்னதான் அந்த வீடியோவில் இருக்கிறது?

image

அதில், நீண்ட நாட்களாக பிரிந்து இருந்த காதலன் விமான நிலையத்தை விட்டு வெளியே வந்ததும் ஆசை ஆசையாக காதலி ஓடிச் சென்று கட்டிப்பிடிக்க நினைக்கையில் கால் இடறி காதலன் மீது விழுந்துவிடுகிறார். அதன் பின்னர் ஆசுவாசப்படுத்தப்பட்ட அவர் தனது காதலனை இறுக கட்டியணைத்துக் கொள்கிறார். இந்த வீடியோவை பகிர்ந்த இணையவாசி காதலில் விழுவதை "Falling in Love" எனக் கேப்ஷன் இட்டிருக்கிறார்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்