
‘விருமன்’ படப்பிடிப்பின்போது சிதிலடைந்தப் பள்ளியை சீரமைத்தது குறித்து நடிகர் கார்த்தி புகைப் படத்துடன் விளக்கமளித்துள்ளார்.
முத்தையாவின் இயக்கத்தில் கார்த்தி நடித்துள்ள ‘விருமன்’ திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. அதில் நடிகர்கள் கார்த்தி, சூரி, ராஜ்கிரண், நடிகை அதிதி, சரண்யா பொன்வண்ணன், இயக்குநர் முத்தையா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். அப்போது பேசிய அவர், படப்பிடிப்பின்போது மூதாட்டி ஒருவர் தன்னை பக்கத்தில் உள்ள பள்ளியை ஒரு நிமிடம் வந்து பார்த்து செல்லுமாறு வலியுறுத்தியதாகவும், அங்கே சென்று பார்த்தபோது மிகவும் மோசமான நிலையில் இருந்த பள்ளியை பலரின் உதவியுடன் சீரமைத்தது குறித்து விளக்கமளித்துள்ளார்.