[X] Close

புதிய செயற்கைக்கோள்: இஸ்ரோ திட்டம்

ISRO-new-satellite

டிசம்பர் மாதத்திற்குள் புதிய செயற்கைக்கோள் ஒன்றை விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சமீபத்தில் அனுப்பிய ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். செயற்கைக்கோள் விண்ணில் நிலைபெறாமல் தோல்வியில் முடிவடைந்தது. தனியார் ஊழியர்களை அதிகளவில் பணியமர்த்தியதே இந்த தோல்விக்கு காரணம் என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. 
இந்நிலையில் தோல்வியில் முடிவடைந்த ஐ.ஆர்.என்.எஸ்.எஸ் செயற்கைகோளுக்குப் பதிலாக மீண்டும் ஒரு செயற்கைகோளை டிசம்பர் மாதத்திற்குள் அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது. 


இதற்காக காட்ரோட் சாட்-2 அல்லது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ்-2 ஆகிய செயற்கைகோள்களில் ஒன்றை நவம்பர் அல்லது டிசம்பருக்குள் அனுப்ப ஆலோசித்து வருகிறது. அவற்றில் எந்த செயற்கைகோளை முதலில் அனுப்புவது என்று விரைவில் முடிவெடுக்கப்படும் என இஸ்ரோ தகவல் தெரிவித்துள்ளது.
 


Advertisement

Advertisement

Advertisement
[X] Close