
திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற மதுரை பள்ளி மாணவ மாணவியரை நடிகர் அஜித் பாராட்டினார்.
திருச்சியில் 47வது தமிழ்நாடு மாநில அளவிலான துப்பாக்கி சுடும் போட்டி கடந்த 24ம் தேதி முதல் 31ம் தேதி வரை நடைபெற்றது. இதில், பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்ட மதுரையைச் சேர்ந்த பள்ளி மாணவ மாணவியர் 14 தங்கம் உள்ளிட்ட 31 பதக்கங்களை பெற்று சாதனை படைத்துள்ளனர்.
இந்நிலையில், மதுரை பிபி குளம் பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான ரிஸ்வந்த், ரித்விக் ஆகிய இருவரும் 14 வயது மற்றும் 18 வயது, 22 வயத்துக்குட்பட்டோர் ஆகிய 3 பிரிவுகளின் கலந்து கொண்டனர். 10 மீட்டர், 50 மீட்டர் ரைப்பில் சுடும் பிரிவில் 14 தங்க பதங்கங்கள், 9 வெள்ளி பதங்கம், 5 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ளனர்.
அதேபோல் ஹரிஹரன் என்ற மாணவன் 10 மீட்டர் ரைப்பில் சுடும் போட்டியில் வெண்கல பதக்கமும், மாணவி மோகிதா 10 மீட்டர் ரைப்பில் சுடும் போட்டியில் வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை வென்றுள்ளார். இந்த வெற்றியின் மூலம் 4 பேரும் தென்னிந்திய அளவிலான துப்பாக்கி சுடும் போட்டியில் கலந்து கொள்ள தேர்வாகியுள்ளனர்.
மேலும் ரித்விக் என்ற சிறுவன் பிஸ்டல் 10 மீட்டர் பிரிவில் 400க்கு 363 புள்ளிகள் பெற்று அனைவரின் கவனத்தை ஈர்த்த நிலையில், இந்த சிறுவனை போட்டியில் கலந்து கொண்ட அஜித் நேரில் பூங்கொத்து வழங்கி பாராட்டினார்.