Published : 17,Sep 2017 07:08 AM

நீட்-டுக்கு எதிராக அமெரிக்காவில் போராட்டம்

Protest-against-Neet-in-America

தமிழகத்தில் நீட் தேர்வை ரத்துசெய்ய வலியுறுத்தி அமெரிக்காவில் போராட்டம் நடைபெற்றது.

நீட் தேர்வை எதிர்த்தும், நீட் தேர்வு காரணமாக உயிரிழந்த மாணவி அனிதாவின் மரணத்திற்கு நீதி கேட்டும் தமிழகம் முழுவதும் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தமிழகத்தில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி அமெரிக்காவின் வாஷிங்டனிலுள்ள இந்திய தூதரகம் முன்பாக தமிழர்கள் கூடி முழக்க மிட்டனர். அனிதா மரணத்திற்கு நீதி வேண்டும் என்றும் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் அவர்கள் முழக்கமிட்டனர். தங்களது கோரிக்கைகளை வெளிப்படுத்தும் வகையில் அவர்கள் பதாகைகளையும் ஏந்தியிருந்தனர். 

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்