பேடிஎம் சர்வர் டவுன்; பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என அறிவிப்பு

பேடிஎம் சர்வர் டவுன்; பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என அறிவிப்பு
பேடிஎம் சர்வர் டவுன்; பிரச்னை விரைவில் சரி செய்யப்படும் என அறிவிப்பு

பேடிஎம் கட்டண செயலி செயல்படாமல் போனதால் பயன்பாட்டாளர்கள் இன்னல்கள் அடைந்த நிலையில் பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என பேடிஎம் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இன்றைய கால சூழ்நிலையில் அனைத்து இடங்களிலும் அனைத்து வகையான சிறு, பெரு பணபரிமாற்றத்திற்கும் ஆன்லைன் வழியான பணபரிமாற்றமே இருந்து வருகிறது. அதில் பேடிஎம் செயலி பெரும் பங்குவகிக்கிறது. இந்நிலையில் நேற்று இரவிலிருந்து இன்று வரை பல பயன்பாட்டாளர்களுக்கு பேடிஎம் செயலி செயல்படாமல் போனது.

செயலியை லாக்-இன் செய்து உள்ளே போனால் தானாக லாக்-அவுட் ஆவதும், பணப்பரிமாற்றம் செய்ய சர்வர் செயலிழப்பு என வருவதுமாய் இருந்தது. இதனால் பல பயன்பாட்டாளர்கள் இன்னல்களுக்கு ஆளான நிலையில் பல பயன்பாட்டாளர்களால் பிரச்சனை இருப்பதாய் சமூக வலைளதங்களில் கருத்து தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிரச்னை விரைவில் சரிசெய்யப்படும் என்று பேடிஎம் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com