Published : 04,Aug 2022 10:08 PM

’’என்னையா வீடியோ எடுக்கறீங்க!’’ - ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானை.. தெறிச்சு ஓடிய இளைஞர்கள்

Wild-elephant-chased-youngsters-who-captured-him-in-Video-at-Nilgiris

கூடலூர் அருகே தன் முன்பு நின்று வீடியோ எடுத்த இளைஞர்களை ஆக்ரோஷமாக காட்டு யானை ஒன்று துரத்தியடித்துள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள பாடந்துறை பகுதியில் மக்னா யானை ஒன்று உணவு தேடி ஊருக்குள் வருவது தொடர்கதையாக உள்ளது. பகல் நேரங்களில் வனப்பகுதிக்குள் தஞ்சமடையும் அந்த யானை இரவு நேரம் ஊருக்குள் நுழைந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதை வாடிக்கையாக கொண்டிருக்கிறது. இரவு முழுவதும் ஊருக்குள் சுற்றி விட்டு அதிகாலை நேரங்களில் சாலையிலேயே நடந்து செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளது. அவ்வாறு ஊருக்குள் நடந்து வந்த யானையை இளைஞர்கள் சிலர் நேருக்கு நேர் நின்று வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்துள்ளனர்.

image

யானை அவர்கள் அருகில் வந்த போதும் புகைப்படம் எடுப்பதை தொடர்ந்துள்ளனர். ஒரு கட்டத்தில் கோபம் அடைந்த யானை அவர்களை ஆக்ரோஷமாக துரத்தி இருக்கிறது. இதில் போட்டோ மற்றும் வீடியோ எடுத்த இளைஞர்கள் அலறியடித்து செல்போன்களை கீழே போட்டுவிட்டு ஓடி உள்ளனர். தற்போது அவர்கள் பதிவு செய்த காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்