
கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி பிரிட்டன் பர்மிங்காமில் தொடங்கிய காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள் கோலாகலமாக நடந்து வருகிறது. பல நாடுகள் பதக்க வேட்டைகளை நிகழ்த்தி வருகின்றன. இதற்கிடையில் இன்று இலங்கை மகளிர் கிரிக்கெட் அணிக்கும் தென் ஆப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணிக்கும் இடையே நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறும் 6 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றிருக்கிறது தென்னாப்பிரிக்க மகளிர் அணி.
தென்னாப்பிரிக்க அணி டாஸ்ஸை வென்று முதலில் இலங்கை அணியை பேட்டிங் செய்யுமாரு அழைத்தது. பேட்டிங் செய்ய களமிறங்கிய இலங்கை அணி 0 ரன்னிற்கு முதல் விக்கெட்டும் 1 ரன்னிற்கு இரண்டாவது விக்கெட்டையும் இழந்தது. அத்துடன், 17.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்து 46 ரன்களுக்கு சுருண்டு ஆட்டமிழந்தது. பின்னர் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி ஒரு விக்கெட்டையும் விட்டுகொடுக்காமல் 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெறும் 6 ஓவர்களிலேயே இலக்கை எட்டி அபார வெற்றி பெற்றது.
க்ரூப் A பிரிவில் முதல் இரண்டு இடத்தில் ஆஸ்திரிலேயா மற்றும் இந்திய அணிகள் இருக்கின்றன. க்ரூப் B பிரிவில் முதல் இரண்டு இடத்தில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் இருக்கின்றன. இலங்கை அணி ஆடிய அனைத்து போட்டிகளிலும் தோல்வியடைந்து கடைசி இடத்தில் உள்ளது.