Published : 04,Aug 2022 04:26 PM

சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான முழு அட்டவணை வெளியீடு

UPSC-Civil-Services-Main-exam-2022-schedule-released-check-details

2022-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுக்கான முழு அட்டவணையை வெளியிட்டுள்ளது யுபிஎஸ்சி.

2022-ஆம் ஆண்டுக்கான சிவில் சர்வீஸ் மெயின் தேர்வுகள் செப்டம்பர் 16, 17, 18 மற்றும் 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறும் என மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) அறிவித்துள்ளது.  காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மதியம் 2 முதல் 5 மணி வரையிலும் என இரண்டு வேளைகளிலும் தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

image

அதன்படி, செப்டம்பர் 16-ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை Paper-1 Essay தேர்வு நடைபெற உள்ளது.

செப்டம்பர் 17-ஆம் தேதி காலை Paper-2 General Studies 1, மதியம் Paper-3 General Studies 2 தேர்வு நடைபெற உள்ளது.

செப்டம்பர் 18-ஆம் தேதி காலை Paper-4 General Studies 3, மதியம் Paper -5 General Studies 4 தேர்வு நடக்கிறது.

செப்டம்பர் 24-ஆம் தேதி Indian Languages,

செப்டம்பர் 25-ஆம் தேதி Optional Subject தேர்வு நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: சாலை தடுப்பில் மோதி அந்தரத்தில் தொங்கும் கார் - வாகன ஓட்டிகள் அச்சம்

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்