கர்நாடகாவில் பெய்யும் கனமழை: காவிரி ஆற்றில் வெள்ளம் - குடியிருப்புகளை சூழந்த தண்ணீர்

கர்நாடகாவில் பெய்யும் கனமழை: காவிரி ஆற்றில் வெள்ளம் - குடியிருப்புகளை சூழந்த தண்ணீர்
கர்நாடகாவில் பெய்யும் கனமழை: காவிரி ஆற்றில் வெள்ளம் - குடியிருப்புகளை சூழந்த தண்ணீர்

கர்நாடகாவில் தொடர்ந்து பெய்யும் கன மழையால் காவிரியாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒகேனக்கல் காவிரி கரையோர குடியிருப்பு பகுதிகளுக்குள் தண்ணீர் புகுந்தது.

கர்நாடக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் தொடர்ந்து கன மழை பெய்துவருகிறது. இதனால் கர்நாடக அணைகளான கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து வினாடிக்கு சுமார் 83 ஆயிரம் கனஅடி உபரி நீர் காவிரியாற்றில் திறந்துவிடப்படுகிறது. இதையடுத்து, ஒகேனக்கல் காவிரியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இன்று (04.08.2022) காலை நிலவரப்படி காவிரியாற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுவுக்கு வினாடிக்கு 1,75,000 கன அடியாக தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. இந்த தண்ணீர் வரத்து மேலும் அதிகரிக்க வாய்புள்ளதாக மத்திய நீர் ஆணைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார்கொட்டாய், ஆலம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் காவிரி கரையோரம் உள்ள குடியிருப்புகள், தங்கும் விடுதிகளை சுற்றி தண்ணீர் புகுந்துள்ளது. அங்குள்ள மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்கவைக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.


இதையடுத்து நேற்றிரவு முன் எச்சரிக்கை நடவடிக்கையாக காவிரி கரையோரம் குடியிருந்த மக்கள், ஒகேனக்கல் சாமியார் மடம் பகுதியில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர். தருமபுரி மாவட்ட நிர்வாகம் தொடர்ந்து, காவிரி கரையோரம் தாழ்வான பகுதிகளில் இருப்போர் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தி வருகிறது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com