Published : 04,Aug 2022 10:54 AM
இயக்குநர் ஷங்கருக்கு கௌரவ பட்டம் வழங்கும் பல்கலைக்கழகம்! சென்னையில் நாளை விழா

வேல்ஸ் பல்கலைக்கழகம் சார்பில் இயக்குநர் ஷங்கர், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா உள்ளிட்டோருக்கு நாளை மதியம் கௌரவ பட்டமளிப்பு தரப்பட உள்ளது. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்று சிறப்புரையாற்ற உள்ளார்.
வேல்ஸ் பல்கலைகழகத்தின் சென்னை பல்லாவரம் மெயின் கேம்பஸ் வளாகத்தில் நாளை (ஆகஸ்ட் 5) மதியம் 12 மணிக்கு, 12-வது பட்டமளிப்பு விழா நடைபெற உள்ளது. இதில் தமிழ் சினிமா தயாரிப்பாளரும் வேல்ஸ் பல்கலைக்கழக நிறுவனருமான ஐசரி கனேஷ் பங்கேற்கிறார். சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பங்கேற்கிறார். இதில் மாணவர்களுக்கு பட்டமளிப்பது மட்டுமன்றி வெவ்வேறு துறையிலுள்ள நான்கு பேருக்கு `கௌரவ பட்டம்’ (Honoris Causa) வழங்கப்பட உள்ளது.
அந்தவகையில் பாபா அடாமிக் ஆய்வு மையத்தின் இயக்குநர் பேராசிரியர் அஜித் குமார் - சினிமா இயக்குநர் ஷங்கர் - கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, ரேடிசன் ப்ளூ ஹோட்டலின் தலைவர் விக்ரம் அகர்வால் ஆகியோருக்கு `கௌரவ’ விருதுகள் வழங்கப்பட உள்ளது.