Published : 03,Aug 2022 02:17 PM

பெற்ற மகளை வன்கொடுமை செய்த அப்பா? 13 வயதிலேயே தாயான சிறுமி... போக்சோவில் கைதான தந்தை

Vellore-Girl-who-gave-birth-to-a-boy-father-arrested-in-Pocso

வேலூரில் 13 வயது மகளை கர்ப்பமாக்கி குழந்தை பெற்றெடுக்க வைத்ததாக, சிறுமியின் தந்தையை போலீசார் போக்சோவில் கைது செய்தனர்.

வேலூர் மாநகராட்சி விருபாட்சிபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சங்கர் (45). இவரது மனைவி இவரை விட்டுப் பிரிந்து வேறொருவருடன் சென்றுவிட்ட நிலையில், தனது 15 வயது மகன் மற்றும் 13 வயது மகளுடன் வசித்துவந்துள்ளார். இந்த நிலையில் அவரது மகள் பிரசவ வலி ஏற்பட்டதை அடுத்து அடுக்கம்பாறையில் உள்ள வேலூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

image

அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. சிறுமியொருவருக்கு குழந்தை பிறந்ததால் மருத்துவமனையில் இருந்த மருத்துவர்கள், வேலூர் சமூகநலத் துறைக்கு இதுகுறித்து தகவல் கொடுத்துள்ளனர். அதன் பேரில் வேலூர் மாவட்ட சமூக நலத்துறையினர் விசாரணை செய்திருக்கின்றனர். அந்த சிறுமியின் கர்பத்துக்கு அவரின் தந்தை சங்கர் தான் காரணம் என தெரிய வந்துள்ளதாக சொல்லப்படுகிறது

இதையடுத்து வேலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் சங்கரை போக்சோ சட்டத்தின்கீழ் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். தந்தையே மகளை கர்ப்பமாக்கி குழந்தையும் பிறக்க காரணமாக இருந்த சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்