வந்தாச்சு குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு... செக் செய்யும் நேரடி லிங்க் இதோ!

வந்தாச்சு குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு... செக் செய்யும் நேரடி லிங்க் இதோ!
வந்தாச்சு குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு... செக் செய்யும் நேரடி லிங்க் இதோ!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நடத்திய குரூப் 4 தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசில் காலியாக உள்ள இளநிலை உதவியாளர், தட்டச்சர், அலுவலக உதவியாளர், கிராம நிர்வாக அலுவலர் உள்ளிட்ட குரூப் 4 பதவிகளில் காலியாக உள்ள 7,301 இடங்களை நிரப்புவதற்கான தேர்வு கடந்த மாதம் 24 ஆம் தேதி நடைபெற்றது. காலை 9.30 மணி முதல் 12.30 மணி வரை நடந்த அத்தேர்வில் கட்டாய தமிழ் மொழி தகுதி & மதிப்பீட்டுத் தேர்வு, பொது அறிவு, திறனறி பகுதி என்று மொத்தம் 300 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெற்றது.

மாநிலம் முழுவதும் 7,689 மையங்களில் நடைபெறும் தேர்வை 22,02,942 பேர் எழுத இருந்ததாக TNPSC தெரிவித்திருந்தது. 9,35,354 ஆண்கள், 12,67,457 பெண்கள், 131 3-ம் பாலினத்தவர்கள் என்று 22,02,942 பேர் தேர்வை எழுதினர். இதில் 27,449 மாற்றுத்திறனாளிகள், 12,644 விதவைகள், 6,635 முன்னாள் ராணுவத்தினரும் அடங்குவர். முறைகேடுகளைத் தவிர்க்க 1,10,150 தேர்வறை கண்காணிப்பாளர்கள், 7,689 கண்காணிப்பு அலுவலர்கள், 1,932 நடமாடும் கண்காணிப்பு படைகள், 534 பறக்கும் படையினர், 7,689 ஒளிப்பதிவாளர்கள், 7,689 சிசிடிவி ஆபரேட்டர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுத்தப்படனர்.

18 லட்சத்து 50 ஆயிரம் பேர் எழுதிய இந்தத் தேர்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பை தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் COMBINED CIVIL SERVICES EXAMINATION-IV IN GROUP-IV SERVICES என்பதை க்ளிக் செய்து தற்காலிக விடைக்குறிப்பை பார்த்துக் கொள்ளலாம்.

இதில் ஆட்சேபனைகள் ஏதும் இருந்தால், வரும் எட்டாம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்றும், தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com