Published : 01,Aug 2022 07:21 AM

செஸ் ஒலிம்பியாட்: இந்திய அணி எந்தெந்த அணிகளுடன் இன்று மோதல்?

In-the-fourth-round-of-the-44th-Chess-Olympiad-series-India-A-will-face-France-in-the-open-category-and-India-A-will-face-Hungary-in-the-women-s-category

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் நான்காவது சுற்று போட்டி ஓபன் பிரிவில் இந்திய A அணி பிரான்ஸ் அணியையும், மகளிர் பிரிவில் இந்திய A அணி ஹங்கேரி அணியையும் எதிர்கொள்கிறது.

44வது செஸ் ஒலிம்பியாட் தொடரின் முதல் மூன்று சுற்றுகளிலும் இந்தியா சார்பில் பங்கேற்றுள்ள 6 அணிகளும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளனர். நான்காவது சுற்றை பொறுத்தவரை ஓபன் பிரிவில் உள்ள இந்திய A அணியை பிரான்ஸ் அணியும், இந்திய B அணியையும் இந்திய C அணி ஸ்பெயின் அணியையும் எதிர்கொள்கின்றனர். இதேபோல மகளிர் பிரிவை பொறுத்தவரை இந்தியா A அணி ஹங்கேரி அணியையும், இந்தியா B அணி எஸ்டோனியா அணியையும், இந்தியா C அணி ஜார்ஜியா அணியையும் எதிர்கொள்கின்றனர்.

image

முதல் மூன்று சுற்றுகளில் இந்திய b அணியில் இடம்பெற்றுள்ள அனைத்து வீரர்களும் வெற்றி பெற்று வரும் சூழலில் மூன்றாவது சுற்றில் பலம் வாய்ந்த நார்வே அணியை வீழ்த்திய உற்சாகத்தோடும் தன்னம்பிக்கையோடும் நான்காவது சுற்றுக்கு வரும் இத்தாலி அணிக்கு எதிரான போட்டியில் இளம் கிராண்ட்மாஸ்டர்கள் குகேஷ், பிரக்ஞானந்தா, நிஹால் சரின் உள்ளிட்டோர் எப்படி விளையாட உள்ளனர் என்பதை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

இதையும் படிக்க: இந்தியாவின் ஆதிக்கம் தொடருமா? வெஸ்ட் இண்டீஸ் உடன் இன்று 2வது டி20 போட்டி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்