Published : 17,Sep 2017 01:54 AM

மோடி பிறந்த நாள்: சர்தார் சரோவர் அணையை நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்!

PM-modi-s-67th-birthday-today

பிரதமர் நரேந்திர மோடி இன்று தனது 67-வது பிறந்தநாளை கொண்டாடவுள்ளார். இதையொட்டி குஜராத்தில் உள்ள சர்தார் சரோவர் அணையை திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார்.

நாட்டின் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு, இந்த சர்தார் சரோவர் அணையை கட்டுவதற்கு கடந்த 1961 ஆம் ஆண்டு ஏப்ரல் 5-ஆம் தேதி அடிக்கல் நாட்டினார். அமெரிக்காவின் கிராண்ட் கவ்லீ அணைக்கு அடுத்தபடியாக உலகிலேயே இரண்டாவது பெரிய அணையாக இதன் கட்டுமானம் நடைபெற்று வந்தது.

450 டன்கள் எடையில் தலா 30 மதகுகள் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு இந்த அணையில் பொருத்தப்பட்டுள்ளன. இதனால் ஒரு முறை மதகு திறக்கப்பட்டு, மீண்டும் மூடுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு மேலாகும். அணையின் மொத்த கொள்ளளவு 4 புள்ளி 73 மில்லியன் கியூபிக் மீட்டர்களாகும். கடந்த 1985ஆம் ஆண்டு முதல் சமூக சேவகர் மேதா பட்கர் உள்பட பலர் இந்த அணைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்தி வந்ததால், அவ்வப்போது கட்டுமானப் பணிகள் கிடப்பில் போடப்பட்டன. எனினும் பல தடைகளை கடந்து இந்த அணை கட்டி முடிக்கப்பட்டுள்ளது. தற்போது 138 அடி உயரத்தில் பிரம்மாண்டமாக உருவெடுத்திருக்கும் இந்த அணை தான் நாட்டின் மிகப் பெரிய அணை என்ற பெருமையை பெற்றுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்