Published : 31,Jul 2022 03:35 PM

கோவை: பக்கத்துவீட்டு சிறுமியை வீடியோ எடுத்து மிரட்டி தொடர் பாலியல் வன்கொடுமை.. இளைஞர் கைது

Lorry-driver-arrested-for-sexually-assaulting-neighbor-s-girl-filming-and-threatening

மதுக்கரையில் பக்கத்து வீட்டு சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு செல்போனில் படமெடுத்து மிரட்டி அடிக்கடி அத்துமீறியதாக டிப்பர் லாரி ஓட்டுநர் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் மதுக்கரையைச் சேர்ந்தவர் பால்ராஜ். டிப்பர் லாரி ஓட்டுநரான இவர், தனது வீட்டின் அருகே குடியிருக்கும் பக்கத்து வீட்டாருடன் நட்பாக பேசி பழகி குடும்ப நண்பர்களாக மாறியுள்ளார். இந்நிலையில், அடிக்கடி வீட்டிற்கு வரும் பால்ராஜ் 9 ஆம் வகுப்பு படிக்கும் சிறுமியுடன் பேசி வந்துள்ளார்.

image

இந்த நிலையில் சிறுமியின் தாய் தந்தை வீட்டில் இல்லாதபோது வீட்டிற்கு வந்த பால்ராஜ், சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததோடு சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதை படமெடுத்து வைத்திருந்த பால்ராஜ், நடந்ததை வெளியே சொன்னால் போட்டோவை வெளியிட்டுவிடுவேன் என்று மிரட்டியுள்ளார்.

இதையடுத்து செல்போனில் இருந்த புகைப்படத்தை காட்டி அவ்வப்போது சிறுமியை பாலராஜ் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்த நிலையில் சிறுமியின் வீட்டிற்குச் சென்ற பால்ராஜ், வழக்கம் போல் சிறுமியை அழைத்துள்ளார். இதைக் கண்ட சிறுமியின் தாயார் சிறுமியிடம் விசாரித்துள்ளார். அப்போது சிறுமி, நடந்ததை கூறியுள்ளார்.

image

இதனையடுத்து மதுக்கரை காவல் நிலையத்தில் சிறுமியின் தாயார் புகார் அளித்துள்ளார். இதைத் தொடர்ந்து புகாரின் அடிப்படையில் பால்ராஜை போக்சோவில் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்