Published : 31,Jul 2022 08:17 AM
`மீண்டும் கொரோனா பாசிட்டிவ் ஆனேன்’- அமெரிக்க அதிபர் ஜோ பைடன் ட்வீட்!

கொரோனாவிலிருந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் குணமடைந்ததாக தகவல் வெளியான நிலையில் புதிய திருப்பமாக, மீண்டும் தொற்று உறுதி செய்யப்பட்டிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்கா அதிபர் ஜோ பைடனுக்கு மீண்டும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த ஜூலை 26 ஆம் தேதி பைடனுக்கு கொரோனா உறுதியான நிலையில், மீண்டும் பரிசோதனை மேற்கொண்டதில் தொற்று இருப்பது தெரியவந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ள பைடன், தான் மீண்டும் கொரோனாவால் பாதிக்கப்பட்டு இருப்பதாக உறுதிபடுத்தியுள்ளார். அதில் உடல்நலத்துடன் இருப்பதாக கூறியுள்ள அவர், அடுத்த சில நாட்களுக்கு வீட்டில் இருந்தே பணியாற்ற உள்ளதாக தெரிவித்துள்ளார்.
Folks, today I tested positive for COVID again.
— President Biden (@POTUS) July 30, 2022
This happens with a small minority of folks.
I’ve got no symptoms but I am going to isolate for the safety of everyone around me.
I’m still at work, and will be back on the road soon.