Published : 29,Jul 2022 06:10 PM

கே.எல். ராகுலுக்கு பதில் இவர் - மாற்று வீரரை அறிவித்த பிசிசிஐ

Sanju-Samson-replaces-KL-Rahul-in-T20I-squad

கே.எல் ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி நட்சத்திர வீரரான கே.எல்.ராகுல் அவ்வபோது காயத்தால் அவதிப்பட்டு வருகிறார். இந்தாண்டில் மட்டும் 3 முறை காயம் காரணமாக விலகி உள்ளார். அண்மையில் கே.எல்.ராகுலுக்கு ஜெர்மனியில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதையடுத்து காயத்திலிருந்து முழுமையாக மீண்டு வந்த கே.எல் ராகுல், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கான அணியில் இடம் பிடித்திருந்தார். ஆனால் வெஸ்ட் இண்டீஸ் புறப்படுவதற்கு சில நாட்கள் முன்னதாக அவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஒருநாள் தொடரை அவர் தவறவிட்டார்.

image

இதனைத்தொடர்ந்து  வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில், கடந்த சில தினங்களுக்கு முன்னர் இந்த டி20 தொடரிலும் அவர் விளையாட மாட்டார் என்று அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் கே.எல் ராகுலுக்கு பதிலாக இந்திய அணியில் சஞ்சு சாம்சன் இணைந்துள்ளதாக பிசிசிஐ அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இதையும் படிக்க: டி20 தொடரையும் வெல்லுமா இந்தியா? - வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக இன்று முதலாவது போட்டி

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்