Published : 29,Jul 2022 07:41 AM

வாகன சோதனையில் மூட்டை மூட்டையாக கைப்பற்றப்பட்ட குட்கா – மதிப்பு எவ்வளவு தெரியுமா?

Gutka-seized-in-bundles-during-vehicle-check-Do-you-know-how-much-it-is-worth

அரியலூரில் லாரியில் மூட்டை மூட்டையாக ரூ.50 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்ளை கடத்தியதாக நான்கு பேர் கைது செய்யப்பட்டனர்.

அரியலூர் மாவட்டம் தா.பழூர் காவல் உதவி ஆய்வாளர் சரத்குமார் தலைமையிலான காவல் துறையினர் கடந்த 23 ஆம் தேதி சிலால் பகுதியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக வந்த லாரியை மறித்து விசாரித்த போது அவர் தர்மபுரி மாவட்டம் தோப்பூரைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் என்பதும் பழைய துணிகளை ஏற்றுக் கொண்டு கும்பகோணம் செல்வதாக கூறியுள்ளார். முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறிய நிலையில், ஜெகதீஸ்வரன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.

image

இந்நிலையில், சந்தேகத்திற்கு இடமான பொருட்கள் அதில் இருக்கு வாய்ப்புள்ளதாக எண்ணி லாரியை தா.பழூர் காவல் நிலையத்திற்கு எடுத்து வந்தனர். பின்னர், கிராம நிர்வாக அலுவலர் ஐயப்பன் மற்றும் உதவியாளர் கோபி முன்னிலையில் லாரியை சோதனை செய்தனர். அப்போது அதில் ஏழு அட்டைப் பெட்டிகள் 24 வெள்ளை நைலான் சாக்கு முட்டைகள் மற்றும் 48 சணல் சாக்கு முட்டைகள் இருந்தன. ஆதை பிரித்து பார்த்தபோது அதில், அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருந்தது தெரியவந்தது.

image

இதையடுத்து குட்கா பொரட்களை கைப்பற்றி வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், தப்பியோடிய லாரி ஓட்டுநர் ஜெகதீஸ்வரன் (27); அந்த வழக்கில் தொடர்புடைய கும்பகோணம் தியாகி ராமசாமி தெருவைச் சேர்ந்த சரவணன் (39) சாக்கோட்டை தெருவைச் சேர்ந்த அழகர் (42) கும்பேஸ்வரர் வடக்கு வீதியைச் சேர்ந்த வஸ்னாராம் (40) ஆகியோரை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்