செஸ்போர்டு கரைவேட்டி, துண்டு அணிந்து சென்னை வந்தார் பிரதமர் மோடி

செஸ்போர்டு கரைவேட்டி, துண்டு அணிந்து சென்னை வந்தார் பிரதமர் மோடி

செஸ்போர்டு கரைவேட்டி, துண்டு அணிந்து சென்னை வந்தார் பிரதமர் மோடி

சென்னையில் நடைபெறவுள்ள செஸ் ஒலிம்பியாட் தொடக்கவிழாவில் பங்கேற்க சென்னை வந்தார் பிரதமர் மோடி. செஸ் கரைவேட்டி, துண்டு அணிந்து பிரதமர் மோடி சென்னை வந்துள்ளார்.

சென்னை அருகே மாமல்லபுரத்தில் கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் இன்று தொடங்க உள்ளது. பிரதமர் மோடி தொடங்கிவைக்க உள்ள இந்தப் போட்டியில், 187 நாடுகளில் இருந்து 2,100 வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை தொடங்கிவைக்க பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தார். குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து தனி விமானம் மூலம் சென்னை வந்தார் பிரதமர் மோடி. அவரை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி, பாஜகவின் வானதி சீனிவாசன் ஆகியோர் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். தமிழக அரசின் சார்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, கே.என். நேரு உள்ளிட்டோர் வரவேற்றனர். டி.ஆர். பாலு, தயாநிதி மாறன் உள்ளிட்ட எம்.பிக்களும் பிரதமர் மோடியை விமான நிலையத்தில் வரவேற்றனர். விமானநிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் ஐ.என்.எஸ் அடையாறு கடற்படை தளம் சென்ற பிரதமர், அங்கிருந்து சாலை மார்க்கமாக விழா அரங்கிற்கு வருகை புரியவுள்ளார். 

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com