Published : 28,Jul 2022 11:27 AM

சுப்மன் கில், சஹால் அபாரம்: வெஸ்ட் இண்டீஸை வைட்வாஷ் செய்தது எப்படி?

Fiery-Mohammed-Siraj-Dismisses-Two-West-Indies-Batters-In-Three-Balls-During-Third-ODI

முகமது சிராஜின் முதல் பந்தில் கைல் மேயர்ஸ், 3வது பந்தில் ஷமர் ப்ரூக்ஸ் என இருவரும் பூஜ்யம் ரன்களில் வெளியேறினர்.

ஷிகர் தவான் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இரு அணிகள் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரின் முதல் 2 போட்டிகளில் அடுத்தடுத்த வெற்றிகளை பெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றிய இந்தியா, நேற்று சம்பிரதாய 3-வது போட்டியில் களமிறங்கியது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து களம் கண்டது. ஷிகர் தவான் – சுப்மன் கில் தொடக்க ஜோடி ஆரம்பம் முதலே நிதானமாகவும் அதிரடியாகவும் ரன்களை சேர்த்தது. இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 113 ரன்கள் ஓப்பனிங் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல தொடக்கம் கொடுத்தபோது 7 பவுண்டரியுடன் 58 (74) ரன்களில் கேப்டன் ஷிகர் தவான் ஆட்டமிழந்தார்.

அடுத்துவந்த ஷ்ரேயாஸ் ஐயரும் சுப்மன் கில் உடன் இணைந்து கூட்டணி அமைத்தார்.  44 (34) ரன்களில் ஷ்ரேயஸ் ஐயர் ஆட்டமிழக்க, அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 8 (6) ரன்களில் ஏமாற்றினார். இருப்பினும் மறுபுறம் அட்டகாசமாக பேட்டிங் செய்த சுப்மன் கில், 7 பவுண்டரி 2 சிக்சருடன் 98 (நாட்அவுட்) ரன்கள் எடுத்து சதத்தை நெருங்கியட்டபோது மழை குறுக்கிட, ஆட்டம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து டக்வொர்த் முறைப்படி இந்திய அணியின் இன்னிங்ஸ் 36 ஓவர்களிலேயே முடித்துக்கொள்ளப்பட்டது.

imageஇதனால் சுப்மன் கில் சதம் அடிக்கும் வாய்ப்பு நழுவியது. 36 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டு இழப்புக்கு 225 ரன்கள் இந்திய அணி சேர்க்க, டக்வொர்த் முறைப்படி அதே 36 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு 256 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்களுக்கு இன்னிங்ஸின் இரண்டாவது ஓவரிலேயே அதிர்ச்சி கொடுத்தார் முகமது சிராஜ். முதல் பந்தில் கைல் மேயர்ஸ் மூன்றாவது பந்தில் ஷமர் ப்ரூக்ஸ் என இருவரை பூஜ்யத்தில் சிராஜ் வெளியேற்றினார்.

image

சாய் ஹோப் 22 (33) மற்றும் பிரண்டன் கிங் (37) இருவரும் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்த முயன்றாலும் இவர்களையும் இந்திய வீரர்கள் ஆட்டமிழக்க செய்தனர். கேப்டன் நிக்கோலஸ் பூரன் அதிரடி காட்டினாலும், 5 பவுண்டரி 1 சிக்சருடன் 42 (32) ரன்களில் பெரிய ரன்களை எடுக்காமல் நடையை கட்டினார். இதையடுத்து சீரான இடைவெளியில் விக்கெட்கள் விழ, கடைசி நேரத்தில் டெயிலண்டர்கள் விக்கெட்டை சஹால் வீழ்த்தினார். இதனால், 26 ஓவர்களில் 137 ரன்கள் எடுப்பதற்குள்ளாகவே அனைத்து விக்கெட்களையும் பறிகொடுத்து தோல்வி அடைந்தது வெஸ்ட் இண்டீஸ். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக சஹால் 4 விக்கெட்களையும் சிராஜ் மற்றும் தாகூர் தலா 2 விக்கெட்டுகளையும் எடுத்தனர். இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி 3 - 0 என்ற கணக்கில் வென்று மேற்கிந்தியத் தீவுகள் அணியை வைட்வாஷ் செய்தது.

இதையும் படிக்க: ”எதிரொலியும் இல்ல.. ஒளியும் ஒலியும் இல்ல” - தோனியுடன் க்ராஸ் டாக் (வைரல் வீடியோ)

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்