Published : 27,Jul 2022 05:27 PM

39 நிராகரிப்புகள்! 40வது முயற்சியில் வெற்றிகரமாக கூகுளில் பணிநியமனம் பெற்று அசத்தல்!

Man-Gets-Hired-By-Google-After-39-Attempts--His-Story-Is-Now-Viral

விடாமுயற்சிக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு மெல்லியக் கோடு தான் உள்ளது. நாம் லட்சியமாக கருதும் இலக்கை அடைய செய்யும் அத்தனைக்குமான பதில், அதன் வெற்றியில்தான் இருக்கிறது. வென்றால் அது விடா முயற்சி! இல்லையென்றால் பைத்தியக்காரத்தனம் என்று ஊரார் பழிக்கு ஆளாக வேண்டி இருக்கும். அப்படி ஒரு சம்பவம் அமெரிக்காவில் நிகழ்ந்திருக்கிறது. தனது பைத்தியக்காரத்தனத்தை “விடாமுயற்சி”க்கி வாழ்த்து மழையில் நனைந்து வருகிறார் ஒருவர். அவர் பெயர் டைலர் கோஹன்.

image

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் வசித்து வருகிறார் டைலர். இவர் ஸ்ட்ராடஜி & ஆப்ஸ் (Strategy & Ops) நிறுவனத்தில் இணை மேலாளராக பணியாற்றி வருகிறார். ஆனால் இவருக்கு உலகின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுளின் பணிநியமனம் பெற வேண்டும் என்பது வாழ்நாள் லட்சியமாக இருந்துள்ளது. இதற்காக அந்நிறுவனத்தில் அடிக்கடி தனது விண்ணப்பத்தை அனுப்பி வந்தார் டைலர். அத்தனை முறையும் நிராகரிப்புதான் பதிலாக கிடைத்தது. ஒன்றல்ல., இரண்டல்ல! மொத்தம் 39 முறை அவரது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன.

அவர் ஆகஸ்ட் 25, 2019 அன்று முதல் முறையாக விண்ணப்பித்துள்ளார். ஆனால் அந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது. இருப்பினும் மனம் தளராமல் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் மீண்டும் ஒரு பதவிக்கு இரண்டு முறை விண்ணப்பித்தார். ஆனால் இரண்டு முறையும் நிராகரிப்பே பதிலாக வந்தது. பின்னர் எட்டு மாதங்களுக்கு பிறகு கொரோனா பொருந்தொற்றுக் காலத்தின்போது ஜூன் 2020 டைலர் மீண்டும் தொடர்ச்சியாக விண்ணப்பிக்கத் தொடங்கினார். ஆனால் அத்தனை முறைக்கும் நிராகரிப்பு! நிராகரிப்பு! அதுதான் பதிலாக வந்தது.

a close up of text on a white background

ஆனால் 39 முறை நிராகரிக்கப்பட்ட பின்னர் 40வது முறையும் எப்போதும்போல கூகுளுக்கு தன் விண்ணப்பத்தை அனுப்பினார். இந்த வருடம் ஜுலை மாதம் 19 ஆன் தேதியன்று கூகுளில் பதில் மின்னஞ்சல் வந்தது. ஆனால் இது மற்றொரு நிராகரிப்பு அல்ல! பணி நியமன ஆணை! உங்கள் விண்ணப்பத்தை ஏற்கிறோம் என்று கூகுள் பதில் அனுப்பி இருந்தது. இதனால் மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த டைலர், தமது நெடுநாள் கனவு நிறைவேறியது குறித்து சமூக வலைதளத்திலும் பகிர்ந்துள்ளார். தனது விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்ட தொகுப்புகளை ஸ்கீரின்ஷாட்டாகவும் அவர் பகிர்ந்துள்ளார்.

“விடாமுயற்சிக்கும் பைத்தியக்காரத்தனத்திற்கும் இடையே ஒரு சிறந்த கோடு உள்ளது. என்னிடம் எது இருக்கிறது என்பதை நான் இன்னும் கண்டுபிடிக்க முயற்சிக்கிறேன். 39 நிராகரிப்புகள், 1 ஏற்பு #acceptedoffer, #application” என்று பதிவிட்டுள்ளார் டைலர். இப்போது அப்பகுதிவை “இது விடாமுயற்சிதான்” என்று குறிப்பிட்டு பகிர்ந்து வருகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்