தமிழகம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க முழுவீச்சில் தயாராகும் பாஜக!

தமிழகம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க முழுவீச்சில் தயாராகும் பாஜக!
தமிழகம் வரும் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க முழுவீச்சில் தயாராகும் பாஜக!

சென்னை வரும் பிரதமருக்கு தமிழக பாஜக உற்சாக வரவேற்பு கொடுக்க திட்டமிட்டிருக்கிறது. கடந்த மே மாதம் பிரதமர் சென்னை வந்த போது கொடுத்த உற்சாக வரவேற்பை விட பிரம்மாண்டமாக கொடுக்க வேண்டும் என திட்டமிடல்கள் செய்யப்பட்டுள்ளன.

செஸ் ஒலிம்பியாட் போட்டி சென்னையில் நடக்க உள்ள நிலையில், அதை தொடங்கி வைக்க இரண்டு நாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி நாளை சென்னை வருகிறார். இதற்காக நாளை மாலை சென்னை விமான நிலையம் வரும் அவருக்கு பாஜக மாநில நிர்வாகிகள் அவரை விமான நிலையத்தில் வரவேற்கிறார்கள் தமிழக அரசு சார்பாகவும் கூட்டணி கட்சிகள் சார்பாகவும் வரவேற்பு கொடுக்கப்படுகிறது.

அதை தொடர்ந்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலமாக - ஐ.என்.எஸ் அடையாறு ஹெலிகாப்டர் தளத்தில் பிரதமர் வந்து இறங்குகிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சிவானந்தா சாலை, பல்லவன் இல்லம், சென்ட்ரல் ரயில் நிலையம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நேரு உள்விளையாட்டு அரங்கம் வழியாக பிரதமர் பயணப்பட உள்ளார். இந்த வழிநெடுக, அவரை வரவேற்க தமிழக பாஜகவினர் திட்டமிட்டுள்ளனர்.

இதற்காக வழிநெடுங்கும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் வகையில் உற்சாக வரவேற்பு கொடுக்க அவர்கள் உள்ளனர். இதற்காக பாரதிய ஜனதா கட்சியின் பல்வேறு அணி, பிரிவு நிர்வாகிகள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழக பாரதிய ஜனதா கட்சியின் அமைப்பு ரீதியாக உள்ள 14 மாவட்டங்களில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் மாவட்ட தலைவர்கள் ஆகியோர் இதில் பங்கேற்கிறார்கள்.

செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி அதை முடித்துக் கொண்டு ஆளுநர் மாளிகைக்கு திரும்பும் பொழுதும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்கப்படுகிறது. இரவு தங்கும் பிரதமர் நரேந்திர மோடியுடன் பாஜக மாநில நிர்வாகிகள் தொழிலதிபர்கள் கூட்டணி கட்சியின் முக்கிய தலைவர்கள் உள்ளிட்டடோர் அவரை சந்தித்து பேச திட்டமிடப்பட்டுள்ளது.

மறுநாள் வெள்ளிக்கிழமை அண்ணா பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். பிரதமர் விழாவில் பங்கேற்க செல்லும் பொழுது, ஆளுநர் மாளிகையில் இருந்து அண்ணா பல்கலைக்கழகம் வரை பாஜகவினர் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க உள்ளனர். அண்ணா பல்கலைக்கழக விழாவை முடித்துக் கொண்டு விமான நிலையம் செல்லும் பிரதமர் அவர்களுக்கு மீண்டும் பாஜகவினர் அண்ணா பல்கலைக்கழகத்தில் இருந்து விமான நிலையம் சிறப்பு நுழைவாயில் (VVIP) வரை வரவேற்பு கொடுக்கிறார்கள்.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com