Published : 27,Jul 2022 09:13 AM

”எதிரொலியும் இல்ல.. ஒளியும் ஒலியும் இல்ல” - தோனியுடன் க்ராஸ் டாக் (வைரல் வீடியோ)

rishab-pant-insta-live-with-surprise-appearance-of-ms-dhoni

மூன்று ஒரு நாள் போட்டி கொண்ட தொடருக்காக இந்திய அணி மேற்கிந்திய தீவுகளுக்கு சென்றிருக்கிறது. இதனையடுத்து 5 டி20 போட்டிகள் கொண்ட தொடரையும் விளையாட இருக்கிறது.

மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி தற்போது இரண்டு நாள் குவாரண்டைனில் இருந்து வருகிறது.

இப்படி இருக்கையில் நேற்று (ஜூலை 26) அணியின் இடது கை பந்துவீச்சாளரான ரிஷப் பண்ட், கேப்டன் ரோஹித் ஷர்மா, சக வீரர்கள் சூர்யகுமார் யாதவ், அக்சர் படேல், அவேஷ் கான், இஷாந்த் ஷர்மா ஆகியோருடன் இன்ஸ்டாகிராம் நேரலையில் பேசினார்.

அப்போது, ரிஷப் பண்ட், முன்னாள் கேப்டனும் விக்கெட் கீப்பருமான மஹிந்திர சிங் தோனியையும் நேரலையில் இணைத்துள்ளார். முதலில் தோனியின் மனைவி சாக்‌ஷி வீரர்கள் அனைவருக்கும் உற்சாகமாக ஹாய் எனக் கூறி ஃபோனை தோனி பக்கமாக திருப்பினார். அப்போது அனைவருக்கும் ஹாய் என தோனி கை அசைத்தார்.

அதைக் கண்ட ரிஷப் பண்ட், “எப்படி இருக்கீங்க மஹி பாய், லைவிலேயே இருங்கள்” என தோனியிடம் கூறியிருக்கிறார். உடனே தோனியோ ஃபோன் கேமிராவை ஆஃப் செய்து விட்டார்.

வெறும் 7 நொடிகளே கொண்ட இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வைரலாக்கப்பட்டிருக்கிறது. இந்த வீடியோ தற்போது தோனி ரசிகர்களை வெகுவாகவே கவர்ந்திருக்கிறது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தில், தோனி உள்ளிட்டோர் பங்கேற்ற இன்ஸ்டாகிராம் லைவ் வீடியோவை கமல்ஹாசனின் பஞ்சத்தந்திரம் படத்தில் வரும் கான்ஃப்ரன்ஸ் கால் காட்சியோடு ஒப்பிட்டு மீம் வீடியோவாக பகிரப்பட்டிருக்கிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்