Published : 16,Sep 2017 11:27 AM

20-ஆம் தேதி 19 எம்எல்ஏக்களுடன் சசிகலாவை சந்திக்கிறார் தினகரன்

Dhinakaran-meets-Sasikala-with-19-MLAs-on-20th

சிறையில் உள்ள சசிகலாவை 19 எம்எல்ஏக்களுடன் வரும் 20 ஆம் தேதி டிடிவி தினகரன் சந்திக்க உள்ளார்.

பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவை டிடிவி தினகரன் வரும் 20ம் தேதி சந்திக்க உள்ளார். அப்போது அவரது ஆதரவு எம்எல்ஏக்கள் 19 பேரும் உடன் செல்கின்றனர். இத்தகவலை தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்கதமிழ்ச்செல்வன் தெரிவித்தார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் நடைபெற்ற பொதுக்குழுவில் சசிகலா பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டதை ரத்து செய்வதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு பிறகு சசிகலாவுடன் தினகரன் மேற்கொள்ளும் முதல் சந்திப்பு என்பதால் இது முக்கியத்துவம் பெறுகிறது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்