Published : 26,Jul 2022 04:27 PM
ஆபத்தான முறையில் கார் கதவை திறந்துவைத்து சாகசம் - அதிரவைக்கும் வீடியோ

இமாசல பிரதேச மாநிலத்தில் காரில் ஆபத்தான முறையில் சாகசம் செய்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோலன் என்ற இடத்தில் காரில் சென்ற நபர் திடீரென அதை இடது பக்கமாக திருப்பி சாலை தடுப்புகளை தாண்டி குதிக்கும் வகையில் ஓட்டினார். இதில் ஓட்டுநருக்கு பெரிய காயம் எதுவும் ஏற்படாவிட்டாலும் வாகனத்திற்கு கடுமையான சேதம் ஏற்பட்டது. ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசை சேர்ந்த அந்த நபர் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.