நாடாளுமன்றத்தில் அமளி.. காங்கிரசை தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்!

நாடாளுமன்றத்தில் அமளி.. காங்கிரசை தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்!
நாடாளுமன்றத்தில் அமளி.. காங்கிரசை தொடர்ந்து திமுக எம்.பி.க்கள் 4 பேர் சஸ்பெண்ட்!

திமுக எம்.பி.க்கள் என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், கனிமொழி சோமு, சண்முகம் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளனர்.

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18ம் தேதி தொடங்கிய நிலையில், அக்னிபாத் திட்டம், ஜிஎஸ்டி வரி உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து விவாதிக்க கோரி எதிர்க்கட்சிகள் செய்த அமளியால் ஒரு வாரமாக நாடாளுமன்றம் முடங்கியது.

இந்நிலையில், பதாகைகளை ஏந்தி சபாநாயகர் இருக்கையை முற்றுகையிட்டும், அமளியில் ஈடுபட்டதாகவும் கூறி திமுக எம்.பி.க்கள்  என்.ஆர்.இளங்கோ, கிரிராஜன், கனிமொழி சோமு, சண்முகம் ஆகியோர் மாநிலங்களவையில் இருந்து தற்காலிக நீக்கப்பட்டுள்ளனர். இடைநீக்கம் செய்யப்பட்ட திமுக எம்.பி.க்கள் மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் பங்கேற்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, ஜோதிமணி, மாணிக்கம் தாகூர் உள்ளிட்ட காங்கிரஸ் எம்பிக்கள் நான்கு பேர், மழைக்கால கூட்டத்தொடர் முழுவதும் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com