தந்தையானார் க்ருனால் பாண்டியா - குழந்தைக்கு முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்த தம்பதி

தந்தையானார் க்ருனால் பாண்டியா - குழந்தைக்கு முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்த தம்பதி
தந்தையானார்  க்ருனால் பாண்டியா - குழந்தைக்கு முத்தமிடும் புகைப்படத்தை பகிர்ந்த தம்பதி

இந்திய கிரிக்கெட் வீரர் க்ருனால் பாண்டியாவிற்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணி வீரரும் ஆல்ரவுண்டர் ஹர்திக் பாண்டியாவின் சகோதரருமான க்ருனால் பாண்டியா கடந்த 2017ஆம் ஆண்டு பன்குரி சர்மாவை திருமணம் செய்தார். இந்த நிலையில் க்ருனால் பாண்டியா - பன்குரி சர்மா தம்பதிக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான செய்தியை க்ருனால் பாண்டியா தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கவிர் க்ருனால் பாண்டியா என தங்கள் குழந்தைக்கு பெயரிட்டுள்ளதாக கூறியுள்ள  க்ருனால் பாண்டியா, அத்துடன் தனது குழந்தைக்கு முத்தமிடும் புகைப்படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இதையடுத்து இந்திய அணியின் ரசிகர்கள் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஸ்பின் ஆல்ரவுண்டரான க்ருனால் பாண்டியா இந்திய அணிக்காக 5 ஒருநாள் மற்றும் 19 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஐபிஎல் தொடரில் 98 போட்டிகளில் ஆடி 1,326 ரன்களை குவித்துள்ள க்ருனால் பாண்டியா, 61 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். கடைசியாக கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவிற்காக ஆடிய க்ருனால் பாண்டியா, அதன்பின்னர் கடந்த ஓராண்டாக இந்திய அணியில் ஆடவில்லை.

இதையும் படிக்க: IND vs WI: 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி: தொடரை கைப்பற்றியது இந்தியா

Related Stories

No stories found.
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com