[X] Close

காட்டாற்று வெள்ளத்தால் துண்டிக்கப்பட்ட கிராமங்கள்

Gravel-flooded-villages

ஈரோடு மாவட்டத்தில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டு சில கிராமங்களில் போக்குவரத்து முற்றிலும் முடங்கியதால், உயர்மட்ட பாலம் கட்டவேண்டும் என பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே தொடர்மழையால் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் அப்பகுதி மக்களின் வெளியூர் போக்குவரத்துகள் முற்றிலும் முடங்கியதால், பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இந்நிலையில் வெள்ளத்தை கடந்து செல்லும் அளவிற்கு உயர்மட்ட பாலம் கட்ட வேண்டும் என்று கிராம மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர்.

தொடர்மழை காரணமாக கடம்பூர், மாக்கம்பாளையம் இடையே செல்லும் மாமரத்துப்பள்ளம், சர்க்கரைப்பள்ளம் ஆகியவற்றில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் தங்கள் போக்குவரத்து முடங்கி வாழ்வாதரம் பாதிப்படைந்துள்ளதாகவும், இதுதொடர்பாக பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை பாலம் கட்டவில்லை என்றும் பொதுமக்கள் குற்றம்சாட்டினர். பாலம் இல்லாத காரணத்தால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்கள் புகார் தெரிவித்தனர். இதையடுத்து தகவலறிந்து வந்த வருவாய்துறை அதிகாரிகள், பாலம் கட்டப்படும் என்று அளித்த உறுதியை அடுத்து மறியல் கைவிடப்பட்டது.


Advertisement

வீடியோ


Advertisement

Advertisement
[X] Close