[X] Close

தமிழக முதல்வராகிறார் சசிகலா

Sasikala-Becomes-Tamilnadu-Chiefminister

அதிமுக சட்டமன்றக் குழு தலைவராக அக்கட்சியின் பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டார். இதையடுத்து, அவர் வருகிற 7ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி தமிழகத்தின் முதலமைச்ச‌ராக பதவியேற்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடை‌பெற்ற எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில், சட்டப்பேரவை அதிமுக தலைவராக சசிகலாவின் பெயரை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் முன்மொழிந்தார். அதை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வழிமொழிந்தனர். சட்டமன்றக் குழு தலைவராக தேர்வு செய்யப்பட்டிருப்பதன் மூலம், சசிகலா முதலமைச்சராவது உறுதியாகியுள்ளது. வருகிற 7ஆம் தேதி அல்லது 9ஆம் தேதி முதல்வராக பொறுப்பேற்கக்கூடும் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement
Advertisement:

Advertisement

Advertisement
[X] Close