Published : 24,Jul 2022 07:31 PM
’அந்த பையில் இருந்தது கட்டுக்கட்டான நோட்டுகள்’.. நேர்மை தவறாத காவலருக்கு குவியும் பாராட்டு

சத்தீஸ்கரில் சாலையோரம் கிடந்த ரூ.45 லட்சம் பணத்தை காவல் நிலையத்தில் ஒப்படைத்த போக்குவரத்துக் காவலருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
சத்தீஸ்கர் மாநிலம் நவ ராய்பூர் பகுதியில் போக்குவரத்துத் துறை காவலராக பணிபுரிந்து வருபவர் நிலாம்பெர் சின்ஹா. இவர் மானா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சாலையின் ஒரு பகுதியில் பை ஒன்றை கண்டெடுத்துள்ளார். அந்த பையில், ரூ. 45 லட்சம் மதிப்பில் 2,000 ரூபாய் மற்றும் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகள் இருப்பதைக் கண்டதும், உயரதிகாரிகளுக்குத் தகவல் அளித்துள்ளார். பின்பு சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் பையை அவர் ஒப்படைத்தார்.
பணப்பையை நேர்மையாக ஒப்படைத்த போக்குவரத்து காவலர் நிலாம்பெர் சின்ஹாவுக்கு உயரதிகாரிகள் பாராட்டு தெரிவித்தனர். மேலும், பணப்பையை தொலைத்தவர் யார் என்பது குறித்து சிவில் லைன்ஸ் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
இதையும் படிக்க: தாங்கள் படித்த பள்ளியின் நலனுக்காக 80s மாணவர்கள் செய்த செயற்கரிய செயல்!