[X] Close

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதி அதிகரிப்பு: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு

Increase-of-Sustainable-Funding-for-Attorneys--Chief-Minister-Palanisamy

வழக்கறிஞர்களுக்கான சேமநல நிதித் தொகை 1.75 லட்ச ரூபாய் அதிகரிக்கப்படுவதாக முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.


Advertisement

சென்னை உயர்நீதிமன்றத்தில் பாரம்பரிய கட்டடம் கட்டப்பட்ட 125வது ஆண்டு விழாவில் பேசிய அவர், வழக்கறிஞர்களின் சேமநல நிதி 5,25,000 ரூபாயில் இருந்து 7 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படுவதாக தெரிவித்தார். மேலும், இந்த கூடுதல் தொகையைப் பெறுவதற்கு சேவைக்கால உச்சவரம்பு ஏதுமில்லை என்றும் அவர் கூறினார்.

சென்னை உயர்நீதிமன்ற கட்டடத்தின் பாரம்பரிய பெருமைகளை பட்டியலிட்ட முதலமைச்சர், சென்னை உயர்நீதிமன்றத்தின் பெயரை தமிழ்நாடு உயர்நீதிமன்றம் என்று மாற்ற பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஜெயலலிதா மத்திய அரசுக்கு அனுப்பியதைக் குறிப்பிட்டார். நீதித்துறையின் வளர்ச்சியில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக கூறிய எடப்பாடி பழனிசாமி, நீதித்துறையினருக்கு குடியிருப்புக் கட்டடங்கள் கட்ட அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். இந்த விழாவில் உச்சநீதிமன்ற நீதிபதிகள், உயர்நீதிமன்ற நீதிபதிகள், மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


Advertisement
Related Tags : SustainablePalanisamyபழனிசாமிEPSCM

Advertisement

Advertisement
[X] Close