Published : 23,Jul 2022 07:34 PM

சூர்யாவின் ‘வாடிவாசல்’ அப்டேட் - ஏறுதழுவல் நுட்பங்களை பயின்ற காட்சித் தொகுப்பு வெளியீடு

Suriya-s-Vaadivaasal-Movie-Jalli-Kattu-learning-Video-released-Not-A-Teaser

நடிகர் சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு, சோதனை படப்பிடிப்பின்போது எடுக்கப்பட்ட காட்சிகளை ‘வாடிவாசல்’ படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

‘எதற்கும் துணிந்தவன்’, ‘விக்ரம்’ படங்களைத் தொடர்ந்து அடுத்ததாக பாலாவின் ‘வணங்கான்’ திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்து வருகிறார். இந்தப் படத்தைத் தொடர்ந்து, இயக்குநர் வெற்றிமாறனின் ‘வாடிவாசல்’ படத்தில் நடிக்கவுள்ளார். சி.சு.செல்லப்பா எழுதிய வாடிவாசல் நாவலை தழுவி எடுக்கப்படும் இந்தப் படத்தில் ஜல்லிக்காட்டு காளையை அடக்கும் வீரராக சூர்யா நடிக்கிறார். இதனை முன்னிட்டு சமீபத்தில், இதற்கான சோதனை படப்பிடிப்பு நடத்தப்பட்டது. மேலும், காளையை அடங்கும் முறைகளையும், பயிற்சிபெற்ற வீரர்களிடமிருந்து சூர்யா கற்றுவந்தார்.

image

இந்தப் படத்தை வி கிரியேஷன்ஸ் சார்பாக கலைப்புலி தாணு தயாரிக்க உள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். வேல்ராஜ் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். இந்நிலையில் இந்தப் படத்திற்காக மாடுபிடி வீரர்களிடமிருந்து ஏறுதழுவலின் நுட்பங்களை பயின்றபோது, படம் பிடிக்கப்பட்ட காட்சிகளை தொகுத்து, சூர்யாவின் பிறந்தநாளை முன்னிட்டு இன்று வெளியிடப்பட்டுள்ளது. இது டீசர் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. ‘வாடிவாசல்’ படத்தில் இயக்குநர் வெற்றிமாறன், சூர்யா, ஜி.வி.பிரகாஷ் ஆகிய 3 பேருமே தேசிய விருதுகளை வென்றவர்கள் என்பதால், படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்