Published : 23,Jul 2022 02:37 PM
'ஜெய் ஸ்ரீராம்' எனக் கூற மறுத்த சிறுவன் மீது பயங்கர தாக்குதல் - போலீஸ் விசாரணை

'ஜெய் ஸ்ரீராம்' எனக் கூற மறுத்த முஸ்லிம் இளைஞர் மீது பயங்கர தாக்குதல் நடத்திய நபர்கள் குறித்து ஹைதராபாத் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலங்கானாவில் இந்து மக்களின் பிரசித்தி பெற்ற 'பொனாலு' பண்டிகையை ஒட்டி தலைநகர் ஹைதராபாத்தில் ஊர்வலம் நடைபெற்றது. சார்மகால் பகுதி அருகே ஊர்வலம் வந்த போது அதில் கலந்துகொண்டிருந்த சிலர், அங்கு நின்றிருந்த 17 வயது சிறுவனிடம் சென்று 'ஜெய் ஸ்ரீராம்' என கோஷமிடுமாறு கூறினர்.
ஆனால், அந்த சிறுவன் அதற்கு மறுப்பு தெரிவிக்கவே அவனை அவர்கள் சரமாரியாக தாக்கினர். இதில் சிறுவனுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. பின்னர் பொதுமக்கள் தலையிட்டு அந்த சிறுவனை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து அந்த சிறுவன் அளித்த புகாரின் பேரில் ஹைதராபாத் போலீஸார் வழக்கு பதிவு செய்து 19 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.