Published : 22,Jul 2022 10:29 PM

3 ரன்னில் சதத்தை மிஸ் செய்த தவான்! ஸ்ரேயாஸ் அய்யர், சுப்மான் கில் அசத்தல் அரைசதம்!

Dhawan-missed-the-century-by-3-runs--Shreyas-Iyer--Subman-Gill-s-fantastic-fifties-

இங்கிலாந்து அணியை அதன் சொந்த மண்ணில் ஒருநாள் மற்றும் டி20 தொடர்களில் வீழ்த்திய உற்சாகத்தில் உள்ள இந்திய அணி, அடுத்ததாக மேற்கு இந்திய தீவுகள் அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் இன்று விளையாடி வருகிறது. இரு அணிகளும் மோதும் முதல் ஒருநாள் போட்டி இன்று இரவு ட்ரினிடாட் நகரத்தில் உள்ள குயின்ஸ் பார்க் ஓவல் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பவுலிங்கை தேர்வு செய்தது.

Image

இந்திய அணி சார்பில் ஷிகர் தவானும் சுப்மான் கில்லும் துவக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். துவக்கம் முதலே கில் அதிரடியாக ஆட, கேப்டன் பொறுப்பை சுமக்கும் தவால் பொறுப்பாக பொறுமையாக ஆடினார். ஏதுவான பந்துகளை இந்த கூட்டணி எல்லைக் கோட்டுக்கு விரட்ட ஸ்கோர் சீராக உயர்ந்து வந்தது. கில் அதிரடியாக சதம் கடந்த நிலையில் பூரானிடம் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். இதையடுத்து ஸ்ரேயாஸ் உடன் இணை சேர்ந்த தவான் அரைசதம் கடந்து அசத்தினார்.

Image

சதம் நோக்கி அற்புதமாக விளையாடி வந்த 97 ரன்கள் எடுத்த நிலையில் தனது விக்கெட்டை பறிகொடுத்து 3 ரன்னில் சதத்தை தவறவிட்டார். அடுத்து சூர்யகுமார் யாதவ் உடன் ஜோடி சேர்ந்த ஸ்ரேயாஸ்-உம் அரைசதம் கடந்தார். ஆனால் அவரது விக்கெட் பறிபோனது இந்திய அணியில் மிடில் ஆர்டர் தடுமாறத் துவங்கியது. 13 ரன்களில் சூர்யகுமார். 12 ரன்களில் சஞ்சு சாம்சன் என தொடர்ந்து விக்கெட் பறிபோக, விறுவிறுவென ஏறிவந்த இந்திய அணியின் ஸ்கோர் மந்தமாக உயரத் துவங்கியது.

Image

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்