Published : 22,Jul 2022 04:57 PM

தேசிய விருதுகளை அள்ளிய ‘சூரரைப் போற்று’ - சிறந்த நடிகர் சூர்யா...!

Soorarai-Pottru-movie-gets-5-National-awards

சூரரைப் போற்று திரைப்படத்தில் நடித்த நடிகர் சூர்யாவுக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லியில் 68வது தேசிய திரைப்பட விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதில் சுதா கொங்கரா இயக்கிய ’சூரரைப் போற்று’ திரைப்படம் சிறந்த திரைப்படமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடித்ததற்காக நடிகர் சூர்யா, சிறந்த நடிகராகவும், நடிகை அபர்ணா பாலமுரளி சிறந்த நடிகையாகவும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் சூரரைப் போற்று படத்திற்கு இசையமைத்த ஜி.வி பிரகாஷ்குமார் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை பெறுகிறார். மேலும் சிறந்த திரைக்கதைக்கான விருதையும் சூரரைப் போற்று பெறுகிறது. ஷாலினி உஷாநாயர் மற்றும் சுதா கோங்கரா ஆகியோர் சிறந்த திரைக்கதைக்கான தேசிய விருதைப் பெறுகின்றனர்.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்