Published : 21,Jul 2022 06:57 PM

'நானும் தன்பாலின ஈர்ப்பாளர்தான்'.. - பரபரப்பை கிளப்பிய பிரபல ரஷ்ய வீராங்கனை!

Top-Russian-tennis-player-Daria-Kasatkina-comes-out-as-gay

தானும் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிவித்து தன்னுடைய காதலியின் புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் டென்னிஸ் வீராங்கனை டாரியா கசட்கினா.

ரஷ்யாவை சேர்ந்த 25 வயதான டென்னிஸ் வீராங்கனை டாரியா கசட்கினா, அண்மையில் நடந்த பிரெஞ்ச் ஓபன் போட்டியில் அரையிறுதிப் போட்டி வரை முன்னேறியது நினைவிருக்கலாம். டென்னிஸ் விளையாட்டில் உலக தரவரிசைப் பட்டியலில் 12வது இடத்தில் இருக்கும் டாரியா கசட்கினா, தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு ஆதரவாக அவ்வப்போது குரல் கொடுத்தும் வந்தார். இந்த நிலையில் தானும் ஒரு தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை அறிவித்து தன்னுடைய காதலியான நடாலியா ஜாபியாகோவின் புகைப்படத்தையும் வெளியிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார் டாரியா கசட்கினா. நடாலியா ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற வீராங்கனை ஆவர்.

image

இது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய டாரியா, நாட்டில் செல்வாக்கு மிக்கவர்களும் விளையாட்டுத் துறைகளில் இருப்பவர்களும் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிரான திருமணத் தடையை எதிர்த்து குரல் கொடுக்க வேண்டும் என்று கூறியுதோடு, தன் காதலியை விரைவில் திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தார்.

image

முன்னதாக ரஷ்யாவை சேர்ந்த கால்பந்து வீராங்கனையான நடியா என்பவரும், தன்பாலின ஈர்ப்பாளர் என்பதை வெளிப்படையாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது. ரஷ்யாவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்கு எதிராக சட்டம் இயற்ற அரசு முயன்று வருவதால் இதற்கு பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இதையும் படிக்க: 'எனது விந்தணுவுக்கு கிராக்கி ஜாஸ்தி!' - சர்ச்சையில் எலான் மஸ்க்கின் தந்தை

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்