Published : 20,Jul 2022 06:33 PM

அசத்தல் நடனம்; பிரம்மாண்ட செட்; ‘தி லெஜண்ட்’ படத்தின் ‘மொசலோ மொசலு’ வீடியோ பாடல் வெளியீடு

Legend-Saravanan-s-The-Legend-Movie-Mosalo-Mosalu-Video-Song-released

இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜின் இசையில் உருவான ‘தி லெஜண்ட்’ திரைப்படத்தின் ‘மொசலோ மொசலு’ பாடல் வீடியோவாக வெளியிடப்பட்டுள்ளது.

லெஜண்ட் சரவணா ஸ்டோரின் உரிமையாளர் லெஜண்ட் சரவணன் தயாரித்து, நடித்துள்ளப் படம் ‘தி லெஜண்ட்’. ஜேடி-ஜெர்ரி இயக்கியுள்ள இந்தப் படத்தில் லெஜண்ட் சரவணனுக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஊர்வசி ரௌதாலா நடித்துள்ளார். மிகவும் பிரம்மாண்டமான பொருட்செலவில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் விஞ்ஞானியாக லெஜண்ட் சரவணன் நடித்துள்ளார். மறைந்த நடிகர் விவேக், மயில்சாமி, விஜயகுமார், சச்சு, லதா, நாசர், பிரபு, ரோபோ சங்கர், யோகி பாபு, பேபி மானஸ்வி கொட்டாச்சி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

image

வருகிற 28-ம் தேதி, தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் மலையாளம் என ஐந்து மொழிகளில் இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகிறது. ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ள இந்தப் படத்தின் ‘மொசலோ மொசலு’ மற்றும் ‘வாடி வாசல்’ பாடல்கள் ஏற்கனவே யூ-ட்யூப் தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. இதனைத் தொடர்ந்து இந்தப் படத்தின் 3-வது பாடலான ‘போ.. போ.. போ..’ என்ற பாடலும் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் ‘மொசலோ மொசலு’ பாடல் லிரிக்கல் வீடியோவாக மட்டுமே முன்பு வெளியாகி 14 மில்லியன் பார்வையாளர்களை கடந்தநிலையில், தற்போது வீடியோவுடன் சேர்த்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடலும் வெளியான சில நிமிடங்களிலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்