Published : 20,Jul 2022 06:30 PM

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியல்.. பில்கேட்ஸை முந்தினார் அதானி! எந்த இடம் தெரியுமா?

Adani-overtakes-Bill-Gates--4th-place-in-the-list-of-the-richest-people-in-the-world-

உலகின் மிகப்பெரிய பணக்காரர் பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை முந்தி இந்தியாவின் கவுதம் அதானி 4 ஆம் இடம் பிடித்துள்ளார்.

போர்ப்ஸ் இதழ் உலகின் மிகப்பெரிய பணக்காரர்களின் புதிய பட்டியலை வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸை பின்னுக்கு தள்ளி இந்தியாவின் கவுதம் அதானி 4ஆம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். கடந்த வாரம் பில் கேட்ஸ் தனது சொத்துக்களில் 20 பில்லியன் அமெரிக்க டாலர்களை பில் மற்றும் மெலிண்டா கேட்ஸ் அறக்கட்டளைக்கு நன்கொடையாக வழங்குவதாக அறிவித்தார்.

Gautam Adani equal to Bill Gates: Mukesh Ambani slips a notch to become world's fourth richest with $125 billion net worth

இதையடுத்து பில் கேட்ஸின் சொத்து மதிப்பு சற்று குறையவே, அதானிக்கும் சந்தையில் அதிக லாபம் கிடைக்கவே அவர் அவர் 4 ஆம் இடத்திற்கு முன்னேறியதாக கூறப்படுகிறது. எரிவாயு, மின்சாரம், துறைமுகம் போன்ற பல துறைகளில் அதானியின் நிறுவனம் கடந்த சில மாதங்களில் அதிக கவனம் செலுத்தி வளர்ச்சி அடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Adani Group Races Ahead To Diversify And Foray Into Wider Businesses: 5  Points

பட்டியலில் யார் யார் எந்த இடம்?

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் சிஇஓ எலான் மஸ்க் 230 பில்லியன் டாலர் மதிப்புடன் முதலிடத்தில் உள்ளார். லூயி விட்டான் சிஇஓ பெர்னால்ட் அர்னால்டு இரண்டாவது இடத்திலும், அமேசான் நிறுவனர் ஜெப் பெசோஸ் 3வது இடத்திலும் உள்ளனர். தற்போது 4வது இடத்தில் 115 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் கவுதம் அதானியும் 5வது இடத்தில் 104 பில்லியன் டாலர் சொத்துக்களுடன் பில் கேட்ஸும் இடம் பெற்றுள்ளனர்.

World's 10 Richest Men's Fortunes More Than Doubled in Pandemic: Oxfam

இப்பட்டியலில் முதல் பத்து இடங்களுக்குள் மற்றொரு இந்தியரும் இடம்பெற்றுள்ளார். அவர் இந்தியாவின் தொழிலதிபரான முகேஷ் அம்பானி. 90.5 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் அவர் பட்டியலில் 10வது இடத்தில் உள்ளார்.

RIL grabs highest spot on Fortune 500 list by any Indian company; breaks  into top 100 global firms | The Financial Express

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்