Published : 19,Jul 2022 04:54 PM
ஆப்பிரிக்காவில் வேகமாக பரவும் மார்பெர்க் வைரஸ்! உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை

ஆப்ரிக்காவில் மார்பெர்க் வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை விடுத்துள்ளது. குறிப்பாக கானா நாட்டில் மார்பெர்க் வைராஸ் ஒரே நாளில் 2 பேர் உயிரிழந்து விட்டதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இதன் பாதிப்பு எபோலா வைரஸை போன்று கடுமையாக இருக்கும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
மார்பெர்க் வைரஸால் பாதிக்கப்பட்ட வௌவால் போன்ற விலங்குகள் மூலம் இந்த தொற்று மனிதர்களுக்கு பரவும் என்று கூறப்பட்டுள்ளது. இதனால் அசைவ உணவுகளை நன்கு சமைத்து சாப்பிடுமாறு கானா மக்களுக்கு உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தியுள்ளது.