Published : 19,Jul 2022 03:49 PM

அரசின் உத்தரவை மீறி இயங்காதது ஏன்? 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்

987-private-schools-that-did-not-operate-yesterday-in-violation-of-the-government-s-order-and-notice-for-explanation-

கள்ளக்குறிச்சி கலவரத்தில் தனியார் பள்ளி தாக்கப்பட்டதைக் கண்டித்து நேற்று விடுமுறை அளித்த 987 தனியார் பள்ளிகளுக்கு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சின்னசேலம் கனியாமூர் தனியார் பள்ளியில் 12-ஆம் வகுப்பு மாணவி மரணம் தொடர்பாக கடந்த ஞாயிறன்று நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதன் காரணமாக, பள்ளி வாகனங்கள், உடமைகளுக்கு தீ வைக்கப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தனியார் பள்ளிகள் இயங்காது என தமிழ்நாடு தனியார் பள்ளி தாளாளர் நலச்சங்கம் அறிவித்திருந்தது. ஆனால், பள்ளிகளை மூடினால் நடவடிக்கை எடுக்கப்படுமென மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரித்திருந்தது.

Kallakurichi Srimathi Suicide Case: Protest And Justice Explained

இந்நிலையில், தமிழ்நாட்டில் நேற்று (ஜூலை 18) 91 சதவிகித பள்ளிகள் வழக்கம்போல இயங்கியதாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது. 9 சதவிகித பள்ளிகள் மட்டுமே, இயங்கவில்லை என்றும் தெரிவித்துள்ளது. அதாவது மொத்தம் உள்ள 11,335 தனியார் பள்ளிகளில் 987 பள்ளிகள் மட்டுமே திறக்கப்படவில்லை என்றும் 10,348 பள்ளிகள் வழக்கம்போல இயங்கியதாக இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

Kallakurichi Srimathi Case: Private Schools Call Off The strike

தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், இராமநாதபுரம், காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளும் (100%) வழக்கம்போல இயங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, செவ்வாய்க்கிழமை முதல் அனைத்து தனியார் பள்ளிகளும் வழக்கம்போல இயங்கும் என்றும்,போராட்டத்தை திரும்பப் பெறுவதாக தனியார் பள்ளிகள் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

Kallakurichi Riots: தமிழகத்தில் 987 தனியார் பள்ளிகளுக்கு நோட்டீஸ்: மெட்ரிக் பள்ளிகள்  இயக்குநரகம் அதிரடி - state-news - News Next Tamil | Tamil News | நியூஸ்  நெக்ஸ்ட் ...

இந்நிலையில், நேற்று தமிழகம் முழுவதும் இயங்காத 987 தனியார் பள்ளிகளுக்கு விளக்கம் கேட்டு மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. அதில், அரசின் அனுமதியின்றி தன்னிச்சையாக விடுமுறை அறிவித்தது ஏன்? எனக் கேள்வி எழுப்பியுள்ளது. அரசின் எச்சரிக்கையை மீறி விடுமுறை அளித்ததற்கு உரிய விளக்கம் தர வேண்டும் என்றும் பள்ளிகளின் விளக்கத்தை பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மெட்ரிக் பள்ளிகள் இயக்குநரகம் தெரிவித்துள்ளது.

சற்று முன்



எடிட்டர் சாய்ஸ்