Published : 19,Jul 2022 12:24 PM
Gas வாங்க போய், லட்சங்களில் பரிசை வென்ற இளம் அமெரிக்க விவசாயி.. அப்படி என்ன நடந்தது?

கடைத்தெருவுக்கு சென்றவருக்கு நல்வாய்ப்பாக 80 லட்சம் ரூபாய்க்கு லாட்டரியில் பரிசு விழுந்துள்ளதென்றால் நம்ப முடிகிறதா?
உண்மையில் இந்த சம்பவம் அமெரிக்காவின் வடக்கு கரோலினாவில் நடந்திருக்கிறது. வில்லியல் ஜோனஸ் என்ற 32 வயதுடைய இளம் விவசாயி ஒருவர் பியூலாவில்லே என்ற பகுதியில் உள்ள சூப்பர் மார்க்கெட்டுக்குச் சென்றிருக்கிறது.
தனக்கான அசைவ உணவு சமைப்பதற்கான பொருட்களை வாங்கச் சென்றிருக்கிறார். முன்பு இதேப்போன்று சென்றபோது லாட்டரி வாங்கியிருந்த வில்லமிற்கு 500 டாலர் பரிசாக கிடைத்திருக்கிறது.
அதேபோல, தற்போது முயற்சிப்போம் என எண்ணி 20 டாலருக்கு 100 மில்லியன் டாலருக்கான ஒரு லாட்டரி டிக்கெட் வாங்கி அதனை ஸ்க்ராட்ச் செய்து பார்த்திருக்கிறார். அதில், வில்லியம் ஜோனஸிற்கு ஒரு லட்சம் டாலர் பரிசாக விழுந்திருக்கிறது.
William Jones of #Richlands bought a scratch-off and bagged $100,000! The 32-year-old farmer bought his $100 Million Mega Cash ticket from @Speedway on S. Jackson St. in #Beulaville. “I think I’ll go ahead and pay for our wedding,” Jones said. #NCLottery https://t.co/9xJlkoOvbs pic.twitter.com/WJNdXemd5A
— NC Education Lottery (@nclottery) July 13, 2022
அதாவது 79 லட்சத்து 93 ஆயிரத்து 355 ரூபாய். கிட்டத்தட்ட 80 லட்சம் ரூபாய் பரிசாக வில்லியமிற்கு ஜாக்பாட் அடித்திருக்கிறது. இது தொடர்பாக நார்த் கரோலினா லாட்டரி நிறுவனத்திடம், “இந்த பரிசு தொகையை வைத்து என்னுடைய திருமணத்துக்காக செலவிட இருக்கிறேன்” என வில்லியம் ஜோனஸ் கூறியுள்ளார்.
இதேபோன்று கடந்த மே மாதத்தன்று, தெற்கு கரோலினாவில் உள்ள நபர் ஒருவர், காலையில் காஃபி குடிப்பதற்காக பால் வாங்கச் சென்றவருக்கு லாட்டரியில் 2 மில்லியன் டாலர் (15 கோடி ரூபாய்)
பரிசாக கிடைத்திருந்தது.