
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு மதவெறியுடன் செயல்படுவதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ விமர்சித்துள்ளார்.
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளையொட்டி மதிமுக சார்பில் தஞ்சையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் வைகோ பேசுகையில், “மத்திய அரசு என்ன செய்கிறது. கவுரியை கொன்றார்கள், கல்புர்கியை கொன்றார்கள், பன்சாரேவை கொன்றார்கள், தபோல்கரை கொன்றார்கள், அவர்கள் இந்து ராஷ்டிரம் என்ற விதத்திலே மதவெறியை கொண்டு வந்து திணிக்கிறார்கள். எல்லாவற்றையும் நசுக்கி, ஒரே மொழி ஒரே கலாச்சாரம், என்ற நிலைமைக்கு வருகிறார்கள். இது பெரிய ஆபத்திலே கொண்டுபோய் விட்டுவிடும். நரேந்திர மோடி அரசுக்கு சொல்கிறேன். இங்கே நீங்கள் அந்த விஷப்பரிட்சையில் இறங்கி பார்க்கலாம். அது நடக்காது” என்றார்.